காலம் கடந்துபோகும் முன் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்: பிரான்ஸ் மக்களுக்கு ஆலோசனை
காலம் கடந்தபின் வருந்திக்கொண்டிருக்காமல், வாய்ப்பிருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என பிரான்ஸ் அரசு தன் குடிமக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
பிரான்ஸ் மக்களுக்கு ஆலோசனை
உடலில் தெம்பு இருக்கும்போதே கடினமாக வேலை செய்து சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதற்காக, பெரும்பாலான இளைஞர்களும் இளம்பெண்களும் தத்தம் வேலையில் கவனம் செலுத்திவருகிறார்கள்.

வேலை செய்வதிலேலேயே வயது கடந்துபோக, ஒரு கட்டத்தில், குழந்தை பிறப்பு கடினமான ஒன்றாகிவிடுகிறது.
ஆகவே, பிரான்ஸ் குடிமக்களில் 29 வயதை எட்டிய அனைவரும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆலோசனை கூறியுள்ளது பிரான்ஸ் அரசு.
குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்போதே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள், இப்போது தவறவிட்டுவிட்டு பின்னால் வருத்தப்படவேண்டாம் என்கிறார்கள் மருத்துவத்துறை அதிகாரிகள்.
பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட பல மேற்கத்திய நாடுகளில், கருவுறுதல் வீதம் (ஒரு பெண் தனது வாழ்நாளில் பெறும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை), குறைந்துகொண்டே வருகிறது.

ஆகவேதான் பிரான்ஸ் அரசு குழந்தை பெற்றுக்கொள்ள இயலும்போதே பெற்றுக்கொள்ளுங்கள் என தன் குடிமக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
சரி, தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வதைக் குறித்து அரசுக்கு என்ன அக்கறை என்றால், காரணம் இருக்கிறது!
அதாவது, மருத்துவத்துறையின் முன்னேற்றம் காரணமாக மனிதர்கள் வாழும் வயது அதிகரித்துவரும் நிலையில், வயதானவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கவேண்டும், அவர்களுடைய மருத்துவச் செலவுகளுக்கு அரசு பணம் செலவிடவேண்டும்.
அதற்கு பணம் வேண்டும். மக்கள் வேலை செய்தால்தானே பொருளாதாரம் இயங்கும். வேலை செய்ய ஆள் இருந்தால்தானே வேலை நடக்கும். ஆக, குழந்தைகள் பல பெற்றுக்கொண்டால், அவர்கள் வளர்ந்து வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இருந்தால்தான் அரசுக்கு வருமானம் வரும்.
அப்படி அரசுக்கு வருமானம் வந்தால்தான் அரசு மக்களுக்காக செலவு செய்யமுடியும். ஆகவேதான், வாய்ப்பிருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என தன் குடிமக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது பிரான்ஸ் அரசு.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |