ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் மீண்டும் பிரான்சில் பிரச்சினை... பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் உயிரிழப்பு
ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசியால் பிரான்சில் மீண்டும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்கள் சிலருக்கு இரத்தக்கட்டிகள் மற்றும் இரத்தம் உறைதல் பிரச்சினை பல்வேறு நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்சில் தற்போது இரண்டு பேர் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டபின் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் பெண்கள், அவர்களில் ஒருவர் 60களிலும் மற்றவர் 70களிலும் உள்ளவர்களாவர்.
ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்த பெண்கள் இருவருக்கும் இரத்தக்கட்டி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் உயிரிழந்துவிட்டார்.
மொத்தம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், உயிரிழப்பு உயிரிழப்புதானே!
ஆனாலும், தடுப்பூசி மட்டுமே கொரோனாவை எதிர்த்து போரிடுவதில் முக்கிய ஆயுதமாக
உலகமெங்கும் கருதப்படுவதால், பாதிப்புகள் இருக்கும் நிலையிலும் பல்வேறு
நாடுகள் தத்தம் மக்களை தடுப்பபூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றன.