ரஷ்ய போர் விமானங்களுக்கு பிரான்ஸ் உதவியது: பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைப்பு...
ரஷ்ய போர் விமானங்களுக்கு பிரான்ஸ் உதவியதாக பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு அரசு சாரா அமைப்புகள் பிரான்ஸ் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
ஒரு பக்கம் உக்ரைன் ஊடுருவலைக் கண்டித்துக்கொண்டே மறுபக்கம் ரஷ்யாவுக்கு பிரான்ஸ் உதவியதாக பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரான்சை மையமாகக் கொண்ட Darwin Climax Coalition மற்றும் உக்ரைன் அமைப்பான Razom We Stand என்னும் இரண்டு அரசு சாரா அமைப்புகள்தான் பிரான்ஸ் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
பிரெஞ்சு ஆற்றல் நிறுவனமான TotalEnergies என்னும் நிறுவனம், ரஷ்ய விமானங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் கச்சாப்பொருளை அனுப்பியதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால், தங்கள் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக தங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறி குற்றச்சாட்டை மறுத்துள்ளது TotalEnergies நிறுவனம்.
ஆகவே, போர்க்குற்றங்களை விசாரிக்கக்கூடிய, தேசிய தீவிரவாத எதிர்ப்பு விசாரணை அதிகாரியிடம் அந்த இரண்டு அமைப்புகளும் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளன.