போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு
போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக, தயாராக இருக்குமாறு பிரான்ஸ் முழுவதிலுமுள்ள மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாராக இருக்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவு
ஐரோப்பா கண்டத்தில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை, பெலாரஸ் நாட்டில் ரஷ்ய படைவீரர்களும் பெலாரஸ் வீரர்களும் இணைந்து பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றில் ஈடுபட இருக்கிறார்கள்.
இந்நிலையில், போர்ப்பயிற்சி என்னும் பெயரில் ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்றும், ஆகவே, நாமும் தயாராக இருக்கவேண்டும் என்றும் ஜேர்மன் பாதுகாப்புத்துறைத் தலைவரான Carsten Breuer எச்சரித்துள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், பிரான்ஸ் முழுவதிலுமுள்ள மருத்துவமனைகள் தயாராக இருக்குமாறு பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகமான Le Canard Enchaîné தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கில், பெரியதொரு போரின் விளைவாக, ஐரோப்பா முழுவதிலுமிருந்து வரும் காயம்பட்ட போர்வீரர்களுக்கு சிகிச்சையளிக்க பிரான்ஸ் முழுவதிலுமுள்ள மருத்துவமனைகள் தயாராக இருக்கவேண்டும் என்றும் பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதற்கு ஆதாரமான ஆவணங்களையும் Le Canard Enchaîné ஊடகம் வெளியிட்டுள்ளது.
ஆக, போர் வெடிக்கும்போது, பிரான்ஸ் தன் நாட்டு போர்வீரர்களுக்கு மட்டுமின்றி, ஐரோப்பா முழுவதிலுமுள்ள கூட்டாளர் நாடுகளின் போர்வீரர்களுக்கும் சிகிச்சையளிக்கும் மருத்துவ மையமாக செயல்படலாம் என்பதற்காக தற்போதே நடவடிக்கைகள் துவக்கப்பட்டுவருவதால், போர் குறித்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டுவருவதாகவும் அச்சம் உருவாகியுள்ளது எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |