பிரான்சில் அனைத்து மாவட்டங்களும் எச்சரிக்கை வரம்பை கடந்துவிட்டன! வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் கொரோனா வைரசால், விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கை வரம்பை அனைத்து மாவட்டங்களும் கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இன்னும் அனைத்து நாடுகளிலும் முற்றிலுமாக குறையவில்லை. இதன் காரணமாக பிரான்ஸ் அரசு மாவட்டம் ஒன்றில், 100, 000 பேரில் 50 பேருக்கும் குறைவாக தொற்று பதிவானால் அது ஆபத்தான மாவட்டம் இல்லை என வகுத்திருந்தது.
இந்த மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட தளர்வுகள் நடைமுறையில் உள்ளன. அதன் படி நேற்றைய தினம் 4 மாவட்டங்கள், 50 பேருக்கும் குறைவாக தொற்று உள்ளாகும் மாவட்டங்களாக இருந்தன.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமையுடன் அந்த அந்த பட்டியலில் இருந்து குறித்த நான்கு மாவட்டங்களும் வெளியேறியுள்ளன.
Mayenne மாவட்டம் நேற்று 50 பேருக்கும் குறைவாக தொற்று பதிவாகும் மாவட்டமாக இருந்த நிலையில், இன்று அது 61,2 பேராக அதிகரித்துள்ளது.
பிரான்சில் உள்ள அனைத்து மாவட்டங்களும் இன்றுடன் எச்ச்சரிக்கை வரம்பை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.