கலவர பூமியான நகரம்... தெருக்களில் திரண்ட ரசிகர்களால் வெடித்த மோதல்
கத்தார் உலகக் கோப்பை அறையிறுதியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதையடுத்து திரளான ரசிகர்கள் தெருக்களில் திரண்ட நிலையில் கலவரத் தடுப்பு பொலிசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
வெற்றிவாய்ப்பை இழந்த மொராக்கோ
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் தெரிவாகியுள்ளது. இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணி வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், பிரான்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறது.
மட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடு ஒன்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவதே இது முதல்முறை என கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் மாண்ட்பெல்லியர் பகுதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இரு அணிக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, பிரான்சில் மொராக்கோ மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாண்ட்பெல்லியர் பகுதியில் கலவரத் தடுப்பு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் அங்காடிகளை சேதப்படுத்தியும் வாகனங்களுக்கு நெருப்பு வைத்தும் ரசிகர்கள் தங்கள் ஆத்திரத்தை தீர்த்துள்ளனர். மேலும், Nice மற்றும் Bordeaux பகுதியிலும் ரசிகர்களால் கலவரம் வெடித்துள்ளதாகவும், பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸில் மட்டும் 5,000 பொலிசார்
பிரான்ஸ் மற்றும் மொராக்கோ ஆட்டம் தொடங்கும் முன்னரே, நாடு முழுவதும் சுமார் 10,000 பொலிசார் குவிக்கப்பட்டதாகவும், தலைநகர் பாரிஸில் மட்டும் 5,000 பொலிசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஒரு உள்நாட்டுக் கலகத்திற்கான அனைத்து தயாரிப்புகளும் நடத்தப்பட்டுள்ளது என பாரிஸ் நகரவாசி ஒருவர் அச்சத்துடன் தெரிவித்திருந்தார். பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 1.5 மில்லியன் மொராக்கோ மக்கள் வசிக்கின்றனர்.
மட்டுமின்றி, மொராக்கோவுடனான பிரான்சின் காலனித்துவ வரலாறு இன்னும் அதிகமான அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.