பிரான்சில் போதைப்பொருளுக்கு எதிராக போராடியவர்: சகோதரர்களை குறிவைத்த மர்ம கும்பல்
பிரான்சில் போதைப்பொருள் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் ஒன்று அமைத்து உதவி வந்த இளைஞர் ஆர்வலர் அமின் கேஸாசியின்(Amine Kessaci) இரண்டாவது சகோதரர் மெஹ்தி கோஸாசி(Mehdi Kessaci) மர்ம குற்றவியல் கும்பலால் மார்செயில்ஸில்(Marseille) சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mehdi Kessaci
ஆர்வலர் அமின் கேஸாசியின் நாட்டில் நிலவி வரும் போதைப்பொருள் வன்முறை குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கவனத்திற்கு எடுத்துச் சென்றவர் ஆவார்.
குற்றவியல் கும்பல் தாக்குதல்
20 வயதே ஆன இரண்டாவது சகோதரர் மெஹ்தி கோஸாசி, நகர மையத்தில் கார் நிறுத்திய போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்னதாக கடந்த 2020ம் ஆண்டில் அமின் கேஸாசியின் மூத்த சகோதரர் பிரஹிம்(Brahim) மர்மமான முறையில் சுடப்பட்டு அவரது காரில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
Amine Kessaci
இது உள்ளூரில் “பார்பிக்யூ” என்று அழைக்கப்படும் வன்முறை கும்பல்களால் வழக்கமாக பயன்படுத்தும் முறை என்று கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவங்கள் போதைப்பொருள் எதிர்ப்பு ஆர்வலர் அமின் கேஸாசிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |