முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஒன்றிற்கு ஒப்புதல் அளித்துள்ள பிரான்ஸ் நாடாளுமன்றம்
பிரான்சில் நீண்ட நாட்களாக விவாதப்பொருளாக விளங்கிவந்த மசோதா ஒன்றிற்கு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதலளித்துள்ளது.
விவாதப்பொருளாக விளங்கிவந்த மசோதா
பிரான்சில், வயது வந்தவர்களில், கொடிய வியாதிகளால் நீண்ட நாட்களாக அவதியுற்றுவருவோர், குணமாக்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள அனுமதிக்கும் விடயம் நீண்ட நாட்களாக விவாதப்பொருளாக விளங்கிவந்தது.

இந்நிலையில், அப்படிப்பட்டவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள அனுமதிக்கும் விடயம் தொடர்பிலான மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதலளித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த மசோதா நாடாளுமன்றத்தில் மேலவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |