பிரான்ஸ் ஆர்ப்பாட்டங்கள்... அதிரவைத்த காட்சிகள்: அதிகாரிகள் அதிரடி
France launches attempted murder investigation after petrol bomb thrown at police: பிரான்ஸ் பொலிசார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொலைமுயற்சி விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று, பிரான்சில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வெளியான சில காட்சிகள் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

அதிரவைத்த காட்சிகள்
அந்த காட்சிகளில், பொலிசார் ஒருவருடைய கால்களில் தீப்பற்றி எரியும் காட்சிகளும் அடங்கும். அதாவது, பொலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார்கள்.
BREAKING: Device thrown at Paris Police explodes catching officers leg on fire as France protests continue on Halloween Video by @CLPRESSFR | Licensing @FreedomNTV Desk@freedomnews.tv https://t.co/lLfy5BPlZY
— Oliya Scootercaster 🛴 (@ScooterCasterNY) October 31, 2026
ஆனால், அந்த குறிப்பிட்ட பொலிசார் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு அல்லது அந்த போத்தலில் வைக்கப்பட்டிருந்தது பெட்ரோல் அல்ல, அது ஏதோ ஒரு பயங்கர ரசாயனம்!
இந்த தாக்குதலில், கால்களிலும் கைகளிலும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொலிசாரில் ஒருவர், அந்த பெட்ரோல் குண்டு, பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு குண்டு என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அந்த பொலிசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில் தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், பொலிசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விடயம், ஒரு கொலை முயற்சி என தான் கருதுவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.
குண்டு வீசிய நபரை அதிகாரிகள் தேடிவருவதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் கொலை முயற்சி விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.