பிரான்சில் மீண்டும் பொதுமுடக்கமா? Omicron பரவல் - அரசின் நிலைப்பாடு என்ன?
Omicron வகை கொரோனா வைரஸின் பரவலை தவிர்க்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஒருவர் அரசின் நிலைப்பாட்டை கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் Omicron வகை கொரோனா வைரஸின் பரவலை எதிர்கொள்ளும் வகையில் பொது முடக்கம் உள்ளிட்ட புதிய சுகாதார விதிகளைத் தவிர்க்க பிரான்ஸ் முயற்சிக்கும் என்று நிதி அமைச்சர் புருனோ லு மெயிர் (Bruno Le Maire) கூறியுள்ளார்.
"நாங்கள் எங்களால் முடிந்தவரை எந்தவொரு புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகளையும் கொண்டுவருவதை அதிகபட்சமாக தவிர்க்க எண்ணுகிறோம்" என்று ஐரோப்பா 1, Les Echos மற்றும் CNews உடனான பேட்டியில் புருனோ லு கூறினார்.
அதுமட்டுமின்றி, சில ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் ஆதரவாக இல்லை என்றும் அவர் கூறினார்.
திங்கட்கிழமையன்று, கோவிட் -19ன் சமீபத்திய அலை, பிரான்சில் Omicron வைரஸின் தாக்கம் மற்றும் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைக் கருத்தில் கொள்வதற்காக, பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக Le Maire இவ்வாறு பேசியுள்ளார்.
நாட்டில் இன்னொரு பொது முடக்க யோசனையை நிராகரித்துள்ள Le Maire, இது மன உறுதியையும் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விடுமுறைகளையும் பாதிக்கும் என்று கூறினார்.
நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதால் சமீபத்திய அலைகளால் பாதிக்கப்படும் துறைகளில் உணவகங்களும் விருந்தோம்பல் துறையும் அடங்கும், என்று Le Maire கூறினார்.
இறுதியாக, "நான் பேசுவது போல், இந்த புதிய Omicron மாறுபாடு பிரெஞ்சு வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தாது" என்று அவர் கூறினார்.