பிரான்சில் இதற்கு வரும் 9-ஆம் திகதி முதல் தடை? வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் ஆபாச படங்கள் கொண்ட அனைத்து இணையதளங்களும் தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் ஆபாச படங்கள் கொண்ட இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரான்சில் இந்த தடை விரைவில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் பிரான்சில் ஆபாச இணையத்தளங்கள் மிகவும் குறைந்த வயது கொண்ட சிறுவர்களை சென்றடைவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
குறிப்பாக, e-Enfance மற்றும் Voix de l'Enfant போன்ற குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த ஆபாச இணையத்தளங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின.
அதுமட்டுமின்றி, இந்த இணையதளங்களை முடக்கும் படி Orange, SFR, Bouygues Télécom, Free, Colt Technologies Services மற்றும் Outre mer Télécom இணைய வழங்குனர்களுக்கும் அறிவுறித்தியிருந்தனர்.
ஆனால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இணைய வழங்குனர்களால் இதனை மேற்கொள்ள முடியாது என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் 9-ஆம் திகதி முதல் பிரான்சில் ஆபாச படங்கள் கொண்ட இணையதளங்கள் முடக்கப்படவுள்ளதாக Tribunal judiciaire de Paris குறிப்பிட்டுள்ளது.
இதில், Pornhub, Youporn, Xvideos, RedTube உள்ளிட்ட ஏராளமான இணையங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.