பிரான்ஸிலும் இந்த நாட்டில் இருந்து வருபவர்களுக்கு தடை! வெளியான முக்கிய அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், பல்வேறு வகைகளில் உருமாறி தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில், தற்போது, தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. இதற்கு விஞ்ஞானிகள்,B.1.1.529 என்று பெயர் வைத்துள்ளனர்.
இதனால், தென்னாப்பிரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு இத்தாலில், ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளது.
அந்த வகையில், தற்போது பிரான்சும் தடை விதித்துள்ளது.
நிலமைகளை ஆராய்ந்து அதன்பின்னர், தளர்வுகள் கொண்டுவரப்படும் அல்லது தனிமைப்படுத்தலுக்குப் பின் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.