பிரான்சில் இனி இதற்கு தடை! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சர்ச்சைக்குரிய வேட்டை நுட்பங்களை பயன்படுத்தி பறவைகளை வேட்டையாட பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
பிரான்சின் பாரம்பரிய பறவை வேட்டை நுட்பங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.
ஜூன் மாதத்தில் இதேபோன்ற பசை பொறி வேட்டைக்கு தடை விதிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
புதிதாக தடைசெய்யப்பட்ட நுட்பங்களில், பிரான்சின் தென்மேற்குப் பகுதிகளிலும் கிழக்கில் உள்ள ஆர்டென்னெஸ் பகுதியிலும் வலைகள் அல்லது பறவை கூண்டுகளுடன் வேட்டையாடுதல் போன்ற நடைமுறைகள் அடங்கும்.
ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியம் பல ஆண்டுகளாக பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை பதிவு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
பிரான்சில் ஆண்டுதோறும் 1,50,000 பறவைகள் பசை பொறிகள் போன்ற சர்ச்சைக்குரிய வேட்டை நுட்பங்களால் இறக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், சில பிரான்சின் வேட்டைக்காரர்கள் இந்த தடை உத்தரவுக்கு கண்டனம்தெரிவித்துள்ளனர், இந்த நுட்பங்கள் வேட்டை மீதான ஆர்வத்தின் ஒரு பகுதி என்று கூறினர்.