மோசமான ஒரு விடயத்துக்காக தலைப்புச் செய்தியாகியுள்ள பிரான்ஸ்
பிரான்சில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதற்காக அல்லாமல், ஒரு மோசமான விடயத்துக்காக தலைப்புச் செய்தியாகியுள்ளது பிரான்ஸ்.
மோசமான விடயத்துக்காக தலைப்புச் செய்தியாகியுள்ள பிரான்ஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், வீடுகள், மருத்துவமனைகள், ரயில்கள், திரையரங்குகள் முதலான இடங்களில் மூட்டைப்பூச்சித் தொல்லை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு ஊடகங்கள் தற்போது இந்த பிரச்சினையைக் குறித்துத்தான் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.
ரயில்களில் உள்ள இருக்கைகள், சோபாக்களில் மூட்டைப்பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் காட்டும் வீடியோக்கள், பிபிசி போன்ற ஊடகங்களில் கூட வெளியாகிவருகின்றன.
பிரான்ஸ் அரசு அவசரக் கூட்டம்
நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் உள்ள நிலையில், தற்போது இந்த மூட்டைப்பூச்சித் தொல்லையை ஒழிப்பது தொடர்பாக பிரான்ஸ் அரசு கூட்டங்கள் நடத்திவருகிறது.
நேற்றும், இந்த மூட்டைப்பூச்சித் தொல்லை தொடர்பில் இந்த வாரம் அவசரக் கூட்டங்கள் நடத்த இருப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |