மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் பிரான்ஸ்? ரஷ்யாவின் கருத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பதிலடி
நீண்ட நாட்களுக்குப் பின் ரஷ்யாவிருந்து பிரான்சுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்த நிலையில், அது இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதற்கு பதிலாக, நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது.
மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் பிரான்ஸ்?
நேற்று முன்தினம், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoigu, பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான Sébastien Lecornuவை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
அப்போது அவர், உக்ரைன், தனது மேற்கத்திய கூட்டாளிகளின் ஒப்புதலின்றி எதையும் செய்யாது என்றும், மாஸ்கோ மீதான தாக்குதலின் பின்னணியில் பிரான்ஸ் இருக்காது என தாங்கள் நம்புவதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, மாஸ்கோ மீதான தாக்குதலின் பின்னணியில் உக்ரைனும் பிரான்சும் உள்ளனவா என்னும் தோரணையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoigu கேள்வி எழுப்பியுள்ளார்.
மேக்ரான் பதிலடி
இத்தகைய கருத்துக்கள் அச்சுறுத்தும் வகையிலானவை என்று கூறியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், இப்படிப்பட்ட கருத்துக்களை ரஷ்யா தெரிவிப்பது ஒன்றும் புதிதல்ல என்றும் கூறியுள்ளார்.
வேறு வகையில் கூறினால், ரஷ்யாவின் கருத்துக்கள் அபத்தமானவை என்று கூறிய மேக்ரான், மாஸ்கோ மீதான தாக்குதலின் பின்னணியில் பிரான்ஸ் இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது என்றும், அது உண்மையுடன் எவ்வகையிலும் ஒத்துப்போகவில்லை என்றும், இது தகவல்களை மிகைப்படுத்துதல் என்றும், ரஷ்யாவின் இன்றைய போர் உபாயங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |