குறைந்துவரும் பிறப்பு வீதம்... பிரான்சில் ஏற்படவிருக்கும் பாதிப்பு
உலகம் முழுவதுமே பிறப்பு வீதம் குறைந்துவரும் நிலையில், ஓய்வூதியம் தொடர்பில் பல நாடுகள் கவலைப்பட ஆரம்பித்துவிட்டன.
குறைந்துவரும் பிறப்பு வீதம்...
சமீபத்தில், பிரான்ஸ் அரசு, குழந்தை பெற்றுக்கொள்ள இயலும்போதே பெற்றுக்கொள்ளுங்கள் என தன் குடிமக்களுக்கு ஆலோசனை கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

அதாவது, மருத்துவத்துறையின் முன்னேற்றம் காரணமாக மனிதர்கள் வாழும் வயது அதிகரித்துவரும் நிலையில், வயதானவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கவேண்டும், அவர்களுடைய மருத்துவச் செலவுகளுக்கு அரசு பணம் செலவிடவேண்டும்.
அதற்கு பணம் வேண்டும். மக்கள் வேலை செய்தால்தானே பொருளாதாரம் இயங்கும். வேலை செய்ய ஆள் இருந்தால்தானே வேலை நடக்கும்.
ஆக, குழந்தைகள் பல பெற்றுக்கொண்டால், அவர்கள் வளர்ந்து, வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இருந்தால்தான் அரசுக்கு வருமானம் வரும். ஆகவேதான் அப்படி ஒரு ஆலோசனை!
பிரான்சைப் பொருத்தவரை, முன்னர் பிறப்பு வீதம் பெண்ணொருவருக்கு 1.8ஆக இருந்த நிலையில், தற்போது அது 1.45ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஓய்வூதியத்துக்காக மட்டும் பிரான்ஸ் பட்ஜெட்டில் 422 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆக, பிரான்சில் பிறப்பு வீதம் குறைந்துவரும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையை ஓய்வூதியத்துக்காக ஒதுக்கவேண்டியுள்ளதால், வரவுக்கும் செலவுக்குமிடையிலான இடைவெளி 2070வாக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சினையைத் தீர்க்க இப்போதைக்கு ஒரே வழிதான், அது, பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதுதான் என்கிறது ஓய்வூதிய ஆலோசனை ஆணையம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |