எங்கள் செவிலியர்களை ஜெனீவா திருடுகிறது: சுவிட்சர்லாந்து மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு
தன் நாட்டு மருத்துவமனை ஊழியர்களை அதிக ஊதியம் தருவதாக ஆசை காட்டி சுவிட்சர்லாந்து தன் பக்கம் இழுத்துகொள்வதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பிரபல பத்திரிகை ஒன்றில், ’எங்கள் செவிலியர்களை ஜெனீவா திருடுகிறது’ என்ற செய்தி தலைப்புச் செய்தியாக வெளியானது.
பிரான்சில் கொரோனா சூழல் மோசமானதாக இருக்கும் நேரத்தில், மருத்துவமனை ஊழியர்களை அது இழந்துவருவதாக அந்த செய்தியில் பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேட்டி கொடுத்திருந்தார்.
பிரான்சின் Haute-Savoie பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Martial Saddier கூறும்போது, ஜெனீவாவிலுள்ள பல தனியார் மருத்துவமனைகள் Haute-Savoieபகுதியிலுள்ள செவிலியர்களை அதிக ஊதியம் தருவதாக கூறி கவர்ந்துகொள்வதாகவும், கொரோனா சூழலில் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் கூறியுள்ளார்.
ஆனால், Haute-Savoie பகுதியிலுள்ள மருத்துவமனை ஊழியர்கள் ஜெனீவாவுக்குவேலைக்குசெல்வது ஒன்றும் புதிதல்ல, ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையில்பணிபுரியும் 69 சதவிகித செவிலியர்கள் பிரான்சில்தான் வாழ்கிறார்கள்.
இந்நிலையில், ஜெனீவா மருத்துவமனைகள் தங்கள் பகுதி உள்ளூர் பத்திரிகைகளில்விளம்பரம் செய்வதாக பிரான்சின் Haute-Savoie பகுதி அலுவலர்கள் குற்றம்சாட்டும் நிலையில், தாங்கள் பிரான்சில் விளம்பரம் செய்வதில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்கள் ஜெனீவா மருத்துவமனை அலுவலர்கள்.