பிரான்ஸ் அரசுக்கு புதிதாக ஒரு தலைவலி
France braces for demonstrations as trade unions strike: பிரான்ஸ் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், வர்த்தக யூனியன்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
விலைவாசி மற்றும் கல்விக்கான நிதியுதவி குறைப்பு போன்ற விடயங்களை முன்வைத்து பிரான்சில் லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்நிலையில், அரசுக்கு கூடுதல் தலைவலி ஒன்று உருவாகியுள்ளது!
அரசுக்கு மீண்டும் ஒரு தலைவலி
பிரான்ஸ் முழுவதும், இன்று வியாழக்கிழமையன்று 500,000 முதல் 700,000 பேர் வரை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உள்ள நிலையில், தலைநகர் பாரீஸில் மட்டும், 80,000 பேர் பேரணியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இதற்கிடையில், நாட்டில் ஏற்கனவே நிலவும் பிரச்சினைகள் போதாதென, இப்போது வர்த்தக யூனியன்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
பேரணிகள் நடத்துவோர் பேரணி நடத்த அனுமதி கேட்க, அதிகாரிகள் அவர்களை மாற்றுப்பாதைகளில் செல்ல அறிவுறுத்துகிறார்கள்.
அதாவது, பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையிலான பாதைகளில் பேரணி நடத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்
. ஆனால், அப்படி பாதைகளை மாற்றுவது மக்களின் பேரணி நடத்தும் உரிமையை அடக்கும் விடயமாகும் என்கிறார்கள் வர்த்தக யூனியன்களைச் சேர்ந்தவர்கள்.
இப்படி உரிமைகளை கட்டுப்படுத்துவது, அமைதியாக இருக்கும் மக்களையும் குரல் எழுப்பவைத்துவிடும் என்கிறார்கள் அவர்கள்.
