பிரான்சில் இன்று முதல் தடுப்பூசி பாஸ் அமுல்!
பிரான்சில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தடுப்பூசி பாஸ் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது பார்கள், உணவகங்கள், ரயில்கள் மற்றும் விமானங்களுக்குள் நுழைய மக்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.
கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவை வைத்திருப்பவர்கள், இனி ஓய்வு நேர நடவடிக்கைகள், சில வேலை நிகழ்வுகள் மற்றும் நீண்ட தூர பயணங்களை அணுக முடியாது.
புதிய பாஸ் பொதுமக்களுக்கு விருந்தோம்பல் செய்பவர்கள் அனைவரையும் பாதுகாக்கும், ஏனெனில் இது தொற்றுநோய்களைத் தடுக்கிறது மற்றும் பார்கள், உணவகங்களை திறந்து வைக்க உதவுகிறது என பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire தெரிவித்துள்ளார்.
மேலும், தனிநபர் பொறுப்பாக இருப்பது தான் கொரோனா வைரஸுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு என அவர் கூறினார்.
கடந்த வாரத்தில் பிரான்ஸில் சராசரியாக 3,60,000 வழக்குகள் பதிவாகியுள்ளன.
எந்த ஒரு பெரிய ஐரோப்பிய நாட்டிலும் இல்லாத அளவிற்கு
அதிகபட்ச தினசரி தொற்று விகிதங்களை தற்போது பிரான்ஸ் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.