புலம்பெயர்வோரை தடுக்க 1,000 அடி நீள வேலி அமைக்க பிரான்ஸ் திட்டம்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக 1,000 அடி நீளத்துக்கு வேலி ஒன்றை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
1,000 அடி நீள வேலி
Calaisக்கு அருகில், பொதுவாக பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு முன் புலம்பெயர்வோர் முகாமிடும் இடத்தில், 1,000 அடி நீளமும், ஆறரை அடி உயரமுமுள்ள இந்த வேலி அமைக்கப்பட உள்ளது.

Gravelines பகுதி மேயரான Bertrand Ringot கூறும்போது, இந்த புலம்பெயர்வோரால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அல்லது பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் வேலி அமைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்கிறார்.
அதேபோல, கவுன்சிலரான Alan Boonefaes என்பவரும், இங்கு முகாமிடும் இந்த புலம்பெயர்வோர் குளிர்காய்வதற்கு நெருப்பு மூட்டுவதற்காக மரங்களை வெட்டுகிறார்கள், அதனால் அதிக அளவில் புகை உருவாகிறது.
இங்கு வாழும் உள்ளூர் மக்களின் அமைதி கெடுகிறது, கோடையில் இங்குள்ள மக்களால் தங்கள் ஜன்னல்களைத் திறந்துவைத்துக்கொண்டு தூங்கக்கூட முடியவில்லை.

சிலர் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளியே செல்லவே பயப்படுகிறார்கள் என்கிறார்.
ஆக, இந்த புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, 100,000 முதல் 150,000 யூரோக்கள் செலவில் வேலி அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.
விடயம் என்னவென்றால், வேலி அமைப்பதற்காக பிரான்ஸ் செலவிடும் பணம், பிரித்தானிய மக்களின் வரிப்பணம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |