ஓய்வு பெற்றவர்கள் குடியுரிமை பெற தடை நீக்கம்: பிரான்ஸ் முடிவு
Foreign-sourced pension income is no longer an automatic reason for refusal: வெளிநாட்டில் பணி செய்து ஓய்வு பெற்று பிரான்சில் வாழ்வோர் குடியுரிமை பெற விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு மே மாதம், அப்போது பிரான்சின் உள்துறை அமைச்சராக இருந்த ப்ரூனோ ரீற்றாலியோ (Bruno Retailleau), தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை வெளிநாட்டிலிருந்து பெறுபவர்களின் குடியுரிமை விண்ணப்பங்களை நிராகரிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவு, வெளிநாட்டில் பணி செய்து ஓய்வு பெற்று பிரான்சில் வாழ்வோர் குடியுரிமை பெற தடையாக அமைந்துவிட்டது.
தடை நீக்கம்
இந்நிலையில், பிரான்சின் தற்போதைய உள்துறை அமைச்சரான லாரன்ட் நுனெஸ், அந்த தடையை நீக்கியுள்ளார்.

அதாவது, வெளிநாட்டில் பணி செய்து ஓய்வு பெற்று பிரான்சில் வாழ்வது மட்டுமே ஒருவர் குடியுரிமை பெற தடையாக அமையாது என்று கூறியுள்ளார் நுனெஸ்.
விடயம் என்னவென்றால், வெளிநாட்டில் பணி செய்து ஓய்வு பெற்று பிரான்சில் வாழ்வது மட்டுமே ஒருவர் குடியுரிமை பெற விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது உண்மைதான்.
என்றாலும், அவர்களுக்கும், மொழித்தகுதி, எழுத்துத்தேர்வு முதலான குடியுரிமை பெறுவதற்கான பிற விதிகளில் எந்த மாற்றமும் இல்லை!