நாளை முதல்... பிரான்ஸ் தலைநகரில் மீண்டும் அமுலுக்கு வரும் கொரோனா கட்டுப்பாடு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், நாளை (31.12.2021) முதல் வெளியிடங்களில் மாஸ்க் அணிதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
வேகமாக பரவி வரும் Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்தக் கட்டுப்பாடு, நாளை வெள்ளிக்கிழமை முதல், 11 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்குள் இருப்பவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள், ஸ்கூட்டர் முதலான இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், விளையாட்டுக்களில் பங்கேற்போர் ஆகியோருக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விதி மீறுவோருக்கு 135 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.