பிரான்சில் 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி!
5 முதல் 11 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் ஃபைசர் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்த பிரான்ஸ் அங்கீகாரம் அளித்துள்ளது.
பிரான்சின் சுகாதார கட்டுப்பாட்டாளரான Haute Autorite de Sante (HAS) திங்களன்று 5 முதல் 11 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் Pfizer-BioNTech COVID-19 தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.
இந்த தடுப்பூசி பிரான்ஸ் முழுவதும் பரவலாக கிடைக்கும் போது குழந்தைகளுக்கு சுலுத்தக்கூடிய அளவிலான மறுத்ததை விநியோகிக்க தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு நடத்தப்பட்டதில், இந்த Pfizer-BioNTech தடுப்பூசி குழந்தைகளுக்கு அதிகளவு பலன் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விருப்பம் உள்ள அனைத்து பெற்றோர்களும் தங்கள் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடலாம் என்று HAS பரிந்துரைக்கிறது.
கடந்த வாரம் பிரான்ஸ் 5-11 வயதுடைய சுகாதார தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) கடந்த மாதம் 5-11 வயதுக்குட்பட்டவர்களுக்கு Pfizer-BioNTech தடுப்பூசியின் குறைந்த அளவிலான மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளித்ததிலிருந்து.
அதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள பல நாடுகள் அந்த வயதினருக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளன.