பிரான்சில் தடுப்பூசி போட்டிருந்தாலும் தனிமைப்படுத்தப்படுவர்! வெளியான முக்கிய அறிவிப்பு
பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள், தடுப்பூசி போட்டிருந்தாலும் கட்டாயம் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் ஐந்தாவது அலையில் இருக்கும் பிரான்சில், ஒமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 91, 608 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது.
இந்நிலையில், இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் தனிமைப்படுத்த தேவையில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.
ஆனால், தற்போது நாட்டில் நிலவும் மோசமான சூழ்நிலையால், ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள், தடுப்பூசி போட்டிருந்தாலும், கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ், மிக வேகமாக பரவக்கூடியது, என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய நிபந்தனை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி தனிமைப்படுத்தப்படுவர்கள் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.