உலகக்கோப்பைக்கான பிரான்ஸ் அணியை அறிவித்த பயிற்சியாளர்
25 வீரர்கள் கொண்ட தற்காலிக அணியை பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் அறிவித்துள்ளார்
அல் வக்ர விளையாட்டு மைதானத்தில் தனது முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை பிரான்ஸ் எதிர்கொள்ள உள்ளது
கத்தாரில் நடக்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கு 25 பேர் கொண்ட தற்காலிக அணியை பிரான்ஸ் பயிற்சியாளர் அறிவித்துள்ளார்.
வரும் 20ஆம் திகதி கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்குகிறது. பிரான்ஸ் அணி தனது முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை சந்திக்கிறது.
இந்த நிலையில் 25 பேர் கொண்ட தற்காலிக அணியை பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் அறிவித்துள்ளார்.
கோல் கீப்பர்களாக கேப்டன் ஹுகோ லோரிஸ், அல்போன்ஸ் அரேலா, ஸ்டீவ் மண்டன்டா உள்ளனர். லுகாஸ் ஹெர்னான்டெஸ், தியோ ஹெர்னான்டெஸ், பிரெஸ்னல் கிம்பெம்பே, இப்ராஹிமா கொனடே, ஜூல்ஸ் கௌண்டே, பெஞ்சமின் பவர்ட், வில்லியம் சலிஃபா, டயோட் உபமேக்கானோ, ரபேல் வார்னே ஆகியோர் தடுப்பு வீரர்களாக செயல்பட உள்ளனர்.
எட்ஹர்டோ கமவிங்கா, யூசூயூப் போஃபனா, மெட்டேயோ குயெண்டோயூசி, அட்ரியன் ராபியட், ஆர்லியேன் சோயமெனி மற்றும் ஜோர்டன் வெரெடௌட் ஆகியோர் நடுகள வீரர்களாக செயல்பட உள்ளனர்.
முன்வரிசை வீரர்களாக கரிம் பென்ஸிமா, கிங்ஸ்லி கோமான், ஓயுஸ்மானி டெம்பெலே, ஒலிவெர் கிரௌட், அன்டோனி கிரீஸ்மன், கய்லியன் பப்பே மற்றும் கிறிஸ்டோபர் குன்கு ஆகியோர் உள்ளனர்.