15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை
பிரான்சில், 15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க பிரான்ஸ் நாடாளுமன்ற ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
பின்னணி
2024ஆம் ஆண்டு, ஏழு குடும்பங்கள் டிக்டாக் என்னும் சமூக ஊடகம் மீது வழக்குத் தொடர்ந்தார்கள்.
அந்த சமூக ஊடகத்தில் வெளியான விடயங்களே தங்கள் பிள்ளைகள் அவர்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ள அவர்களைத் தூண்டியதாக அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தார்கள்.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஆணையம் ஒன்று அந்த துயர சம்பவங்கள் தொடர்பாக விசாரணையைத் துவக்கியது.
விசாரணையின் முடிவில், 15 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க பிரான்ஸ் நாடாளுமன்ற ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், 18 வயது வரையுள்ள பிள்ளைகள், இரவு 10.00 மணி முதல் காலை 8.00 மணி வரை சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கவும் அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையில், பிரான்ஸ் மட்டுமின்றி, ஸ்பெயின், கிரீஸ் முதலான பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்பில் நெறிமுறைகளை வகுக்குமாறு ஐரோப்பிய ஆணையத்தை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |