உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை உருவாக்க உதவும் பிரான்ஸ்
The Extremely Large Telescope is under construction in Chile: உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி சிலி நாட்டில் உருவாக்கப்பட்டுவருகிறது.
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்று உதவி வருகிறது.
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி
The Extremely Large Telescope (ELT) என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி European Southern Observatory (ESO) என்னும் அமைப்பினால் உருவாக்கப்பட்டுவருகிறது.

சிலி நாட்டில் உருவாக்கப்படும் அந்த தொலைநோக்கி தொடர்பான பணிகள் 2029ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த தொலைநோக்கியின் முக்கிய பாகங்களில் ஒன்றான முதன்மை ஆடி, பிரெஞ்சு நிறுவனமான Safran Reosc என்னும் நிறுவனத்தால் பிரான்சில் உருவாக்கப்பட்டுவருகிறது.
39 மீற்றர் விட்டம் கொண்ட அந்த முதன்மை ஆடியை தயாரிப்பது மிகக் கடினமான பணி என்கிறார்கள் அப்பணியுடன் சம்பந்தப்பட்டவர்கள்.
இந்த தொலைநோக்கி, வானில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கப் பயன்படுவதையும் தாண்டி, தொலைவிலுள்ள விண்மீன் மண்டலங்களையும் ஆராய அறிவியலாளர்களுக்கு உதவ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.