சிறுமியின் பொய்யால் பிரான்சில் ஆசிரியர் கொல்லப்பட்ட வழக்கு: நீதிமன்றத்தின் முடிவு
பிரான்சில் 13 வயது மாணவி சொன்ன ஒரு பொய், ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்ததுடன், உலக நாடுகளில் பலவற்றிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
தலைவெட்டி கொலை செய்யப்பட்ட ஆசிரியர்
பாரீஸ் பள்ளி ஒன்றில், வரலாறு பாடவேளையின்போது Samuel Paty என்ற ஆசிரியர், தான் முகமது நபியின் நிர்வாணப் படங்களை காட்ட இருப்பதாகவும், இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என்று கூறியதாகவும் ஒரு 13 வயது மாணவி தன் தந்தையிடம் சென்று கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, பத்து நாட்களுக்குப் பின் Samuel Paty தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற Abdullakh Anzorov என்ற தீவிரவாதியும் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டான்.
மாணவி சொன்ன பொய்... படுகொலையில் முடிந்த பயங்கரம்
அந்த மாணவி வகுப்புக்கு அவ்வப்போது மட்டம் போட்டதால், ஆசிரியர் அவளை சஸ்பெண்ட் செய்துள்ளார். அது அவளது தந்தைக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பொய் சொல்லி கவனத்தை வேறு பக்கம் திருப்ப முயன்றுள்ளாள் அந்த மாணவி.
அதற்காக, தன் தந்தையிடம் சென்று பொய் சொல்லியிருக்கிறாள் அந்த பெண்.
மகள் சொல்லியதை நம்பிய அவளது தந்தையான Brahim Chnina (48), ஆசிரியர் Samuel Patyக்கு எதிராக பேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டதுடன், அவர் மீது பள்ளியிலும், பொலிசாரிடமும் புகாரும் அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிய இந்த செய்திகள், தீவிரவாத எண்ணம் கொண்ட செசன்ய அகதியான Abdoullakh Anzorov (18) என்பவனைச் சென்றடைய, அவன் ஆசிரியர் Samuel Patyயை தலையை வெட்டிக் கொன்றுவிட்டான். அவனை பொலிசார் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.
ஆனால், அந்த வகுப்பிலிருந்த மாணவ மாணவிகள் பலரும், ஆசிரியர் கார்ட்டூன்கள் குறித்து கூறும்போது அந்த மாணவி வகுப்பிலேயே இல்லை என்றும், ஆசிரியர் யாரையும் வகுப்பை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்கள். ஆக, அந்த மாணவி சொன்னது பொய் என பின்னர்தான் தெரியவந்தது.
நீதிமன்றம் முடிவு
பிரான்சில், நடைபெற்று வந்த அந்த வழக்கில், பொய் சொன்ன அந்த சிறுமியின் தந்தையான Chnina முதலாக எட்டு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
Chninaவின் மகளுக்கு கடந்த ஆண்டே 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், அவள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டுமே சிறை செல்லும் வகையில், அந்த தண்டனை suspended sentence என்னும் வகையிலான தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு, 18 மாதங்கள் முதல் 16 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என சட்டத்தரணிகள் கோரியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |