புலம்பெயர்வோரைத் தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிசார்: ஆனால்...
பிரித்தானியா கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு முதன்முறையாக புலம்பெயர்வோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தார்கள் பிரான்ஸ் நாட்டு பொலிசார்.
ஆனால், அவர்கள் மீது தொண்டு நிறுவனம் ஒன்று மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது!
அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிசார்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு பெரும் தொகை கொடுத்துள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பிரான்சிலிருந்து புறப்பட்ட புலம்பெயர்வோர் படகொன்றை தடுத்து நிறுத்துவதற்காக, அதைக் கத்தியால் கீறினார்கள் பிரெஞ்சு பொலிசார்.
அந்தப் படகில் சுமார் 25 பேர் இருந்த நிலையில், பொலிசார் அந்த ரப்பர் படகை கத்தியால் கீறியதால் அதிலிருந்த காற்று வெளியேற, படகிலிருந்த புலம்பெயர்வோர் பதறியடித்துக்கொண்டு கரைக்கே திரும்பினார்கள்.
அந்தப் படகு ஆழமற்ற இடத்தில் நின்றதால் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
ஆனால், கடலில் நின்ற படகை கத்தியால் கீறி படகிலிருந்தவர்களின் உயிருக்கு பொலிசார் ஆபத்தை ஏற்படுத்தியதாக Utopia 56 என்னும் தொண்டு நிறுவனம் பிரான்ஸ் மனித உரிமைகள் அமைப்பில் புகார் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடலில் நிற்கும் படகை எதுவும் செய்யக்கூடாது என பிரான்ஸ் பொலிசாருக்கு விதிகள் உள்ள நிலையில், பொலிசார் விதிகளை மீறீயதாக, பொலிசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் அமைப்பிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |