மிக விரைவில் பிரான்சும் அந்த பட்டியலில் சேர்க்கப்படலாம்! கவனம்...பிரித்தானியா பிரதமர் போரிஸ் தகவல்
கொரோனாவால் பயண சிவப்பு நாடுகளின் பட்டியலில் விரைவில் பிரான்சும் சேர்க்கப்படலாம் என்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக பிரான்சில் கொரோனாவின் மூன்றாவது அலை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இதனால் பிரித்தானியா கொரோனாவின் மூன்றாவது அலை நம்மை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறது.
இதற்கு குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலை சிவப்பு நாடுகளின்(கொரோனா அதிகம் பரவும் நாடுகள்) பட்டியல் எனவும், இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் தடை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் அந்த சிவப்பு பட்டியல் நாடுகளில் பிரான்ஸ் சேர்க்கப்படலாம் என்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சில நேரங்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றால், அதை எடுத்து தான் ஆக வேண்டும்.
பிரித்தானியா எந்த அளவிற்கு இறக்குமதியை நம்பியிக்கிறது என்பது தெரியும். ஹாலியர் மீதான கட்டுப்பாடுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தேவைப்பட்டால் ஒரு முடிவை எடுக்க நேரிட்டால், அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை நிராகரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சின் சில பகுதிகள் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
விஞ்ஞானிகள் ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு அதிக எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மிக விரைவில் ஒரு முடிவை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும், புதிய மாறுபாடுகளைத், அதாவது பரவுவதலை தடுப்பதும் அவசியம்.
கொரோனா ஊரடங்கு விதிகளின் கீழ் வெளிநாட்டு பயணம் இன்னும் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. வரும் திங்கட் கிழமை முதல் பிரித்தானியாவில் பயணக்கட்டுபாடுகளில் புதிய விதிமுறைகள் வரவுள்ளது.
அதை மீறுவோருக்கு 5000 பவுண்ட அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.