பிரான்சில் நிலைமை விரைவில் மிக மோசமாகும்! போட்டுடைத்த சுகாதார அமைச்சர்
பிரான்சில் நிலைமை விரைவில் மிக மோசமாகும் என நாட்டிகள் சுகாதார அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.
பிரான்சில் தினசரி கிட்டதட்ட 70,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதைக்கு, தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு விடுதிகளை மூடியுள்ள பிரான்ஸ் அரசாங்கம், பெரும்பாலான பொது இடங்களுக்குள் நுழைய ஹெல்த் பாஸை கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில், விரைவில் பிரான்ஸில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டும் என நாட்டின் சுகாதார அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.
அதேசமயம், தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தும் எந்தவித திட்டமும் பிரான்ஸ் அரசாங்கத்திடம் இல்லை என கூறினார்.
ஒமிக்ரான் மாறுபாடு ஜனவரி தொடக்கத்தில் பிரான்சில் தீவிரமாக பரவும் மாறுபாடாக இருக்கும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்க் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை நம்பியிருக்கிறது.
வைரஸ் பரவலின் வேகத்தைக் குறைப்பது நோக்கம் அல்ல, ஏனெனில் ஒமிக்ரான் மாறுபாடு மிகவும் வேகமாக பரவுகிறது.
மருத்துவமனைகளில் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று Olivier Veran கூறினார்.