பிரான்சில் 5 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்! என்ன தவறுக்காக தெரியுமா?
பிரான்சில் போதைப் பொருள் அடிமையானவர்களுக்கு போதை பொருட்கள் விநியோகித்த கும்பலுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் 93 மாவட்டங்களை குறி வைத்து போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு, போதை பொருட்களை விநியோகம் செய்த குற்றத்திற்காக ஐந்து பேர் கொண்ட குழு கை செய்யப்பட்டனர்.
இவர்களிடம் 2 கிலோ போதைப் பொருள், 100 கிராம் கஞ்சா மற்றும் ஹெராயீன் போன்றவை மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 200,000 யூரோக்கள் வரும் என்று அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது.
அதன் பின் கைதானவர்களை விசாரணை மேற்கொண்ட போது, அதில் நான்கு பேர் செனகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் அங்கிருக்கும் பொப்பினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், நீதிமன்றம் கைதானவர்கள் குற்றம் செய்தது நிரூபணமானதால், ஐந்து பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 யூரோவில் இருந்து 80,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, இதில் குற்றவாளிகளில் ஒருவரான பிரான்ஸ் நாட்டவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இல் து பிரான்சுக்குள் வசிக்க தடையும் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.