புலம்பெயர்ந்தோரை அடிமைகள் போல் நடத்திய மூன்று பேருக்கு பிரான்சில் சிறை
பிரான்சில், ஷாம்பெய்ன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்தியதுடன், அவர்களை அடிமைகள் போல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை அடிமைகள் போல் நடத்திய நிறுவனம்
Anavim என்னும் ஷாம்பெய்ன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிக்கமர்த்தப்பட்ட புலம்பெயர்ந்தோர், காலை 5.00 மணி முதல் மாலை 6.00 மனி வரை வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாகவும், தங்களை பழங்கால கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் தங்கவைத்ததாகவும், உணவோ, தண்ணீரோ கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
தொழிலாளர் நல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொண்டபோது, பணியாளர்கள் சரியான கழிவறைகளோ குளியலறைகளோ இல்லாத இடங்களில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுயமரியாதை என எதுவுமே கொடுக்கப்படாமல் தங்கவைக்கப்பட்டது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, Anavim நிறுவனத்தின் இயக்குநரான தனது 40 வயதுகளிலிருக்கும் ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறையும், இரண்டு ஆண்டுகள் suspended sentence வகையிலான தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவருடன் பணியாற்றும் இரண்டு ஆண்களுக்கு ஓராண்டு சிறையும் suspended sentence வகையிலான தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த மூன்று பேரும் ஆளுக்கு 4,000 யூரோக்கள் இழப்பீடு வழங்கவும் பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |