பிரான்ஸில் மீண்டும் தீவிரமாக பரவும் கொரோனா! சுகாதார அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில், 30,000 பேர் கொரோனாவாக் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
பிரான்சில் கொரோனாவின் ஐந்தாவது அலை காரணமாக, சமீப நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் சுகாதார அமைச்சர் Olivier Véran இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கடந்த 24 மணி நேரத்தில் 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், கோடை காலத்தின் பின்னர் இதுபோன்ற அதிகளவான தொற்று தற்போது பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
ஏனெனில் இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 11-ஆம் திகதி, 30,920 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பின் தற்போது 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.
நாம் இப்போது கொரோனாவின் ஐந்தாவது அலையில் இருக்கிறோம். ஆறு மில்லியன் பேர் இதுவரை எந்த ஒரு தடுப்பூசியினையும் போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இது மிகவும் அதிகமானது.
நான் காத்திருக்கின்றேன் என்பதையும், நேரம் இல்லை என்பதையும் சொல்லுவதை விடுத்து உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளார்.