பிரான்சில் ஊரடங்கை அமுல்படுத்துங்க... எச்சரிக்கும் சுகாதார ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குனர்
பிரான்சில் உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகள் போன்றவை மூடப்பட்டு, ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும் என்று தேசியப் பொதுச் சுகாதார ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் வில்லியம் டாப் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் ஐந்தாம் அலை உச்சத்தில் இருக்கும் பிரான்சில், ஒமைக்ரான் பரவலும் தீவிரமாகி வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும் என்று தேசியப் பொதுச் சுகாதார ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் William Dab கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்போது அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் கொரோனாவை தடுப்பதற்கான வழிகள் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்தல் நாட்களை குறைப்பது தொற்றின் உச்சத்தை அதிகரிக்குமே தவிர, குறைக்காது.
இதனால் பிரான்சி பொருளாதாரம் வீழ்ச்சியடையும். எனவே ஊரடங்கை அரசு உடனடியாக அமுல்படுத்தி, தேநீர் விடுதிகள், உணவகங்கள் போன்றவைகளை மூட வேண்டும். பள்ளிகள் திறப்பதற்கான நாட்களை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
William Dab கடந்த 2003 முதல் 2005-ஆம் ஆண்டு வரை சுகாதாரப் பொது ஆணையத்தின் தலைமை இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.