இந்த நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கான விசாக்கள் பாதியாக குறைக்கப்படும்! பிரான்ஸ் அறிவிப்பு
Maghreb நாடுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கான விசாக்களின் எண்ணிக்கையை பிரான்ஸ் குறைக்கும் என அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிகாரிகளால் அனுப்பப்பட்ட சட்டவிரோத குடியேறியவர்களை திரும்பப் பெற அவர்களின் அரசாங்கங்கள் மறுத்ததால், Maghreb நாடுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கான விசாக்களின் எண்ணிக்கையை பிரான்ஸ் குறைக்கும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்தார்.
பிரான்ஸ் அரசாங்கம் அல்ஜீரியா மற்றும் மொராக்கோவிலிருந்து வரும் குடிமக்களுக்கு வழங்கும் விசாக்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து, துனிசியர்களுக்கான விசாக்களை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைக்கும் என்று அட்டல் கூறினார்.
எங்களுக்கு வேண்டாத மற்றும் பிரான்சில் தங்க வைக்க முடியாத நாட்டவர்களை இந்த நாடுகள் ஏற்கவில்லை என்பதால் இது அவசியமாக எடுக்கப்பட்ட முடிவு என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் குடியேற்றம் ஒரு முக்கிய பிரச்சனையாகி வருகிறது, வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகள், மாக்ரோனின் கொள்கைகளுக்கு சவால் விடுகின்றன.
எனினும், மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தொடர்பில் மாக்ரோன் இன்னும் எந்த முடிவையும் சொல்லவில்லை.