இதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்! இந்தியா வந்துள்ள பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பேச்சு
பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி இன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் இரு நாடுகள் தொடர்பில் சில முக்கிய விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
இந்திய-பிரான்ஸ் நாடுகளிடையே உள்ள உறவுகள் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
டெல்யில் நிபுணர் குழுவுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற பார்லி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும், தென் சீனக் கடலிலும் சீனா தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறது என்றும், கடற்பயண சுதந்திரத்தையும் சர்வதேச விதிகளுக்கு இணங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
#WATCH | French Defence Minister Florence Parly inspects Guard of Honour in New Delhi pic.twitter.com/AUEz5133fD
— ANI (@ANI) December 17, 2021
ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து பேசிய அவர், பயங்கரவாதத்தின் சவாலை தீவிரமாக கையாள வேண்டும் என்றும், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் டெல்லியில் உள்ள தேசிய நினைவு சின்னத்திற்கு சென்ற புளோரன்ஸ் பார்லி, அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
புளோரன்ஸ் முன்னிலையில் Guard of Honour நடத்தப்பட்ட நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.