சுதந்திர தேவி சிலையைத் திருப்பிக் கொடுங்கள்: பிரான்ஸ் கோரிக்கையால் சர்ச்சை
பிரான்ஸ் அமைச்சர் ஒருவர், சுதந்திர தேவி சிலையைத் திருப்பிக் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் கேட்டுள்ளதைத் தொடர்ந்து சர்ச்சை உருவாகியுள்ளது.
சிலையைத் திருப்பிக் கொடுங்கள்
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதியுமான ரஃபேல் க்லக்ஸ்மேன் (Raphaël Glucksmann) என்பவர், சுதந்திர தேவி சிலையைத் திருப்பிக் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் கேட்டுள்ளார்.
விடயம் என்னவென்றால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை (Statue of Liberty), பிரான்ஸ் நாடு அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கிய சிலை ஆகும்.
1884ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் திகதி, அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் 108ஆவது ஆண்டுவிழாவையொட்டி, பிரான்ஸ் சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கியது.
அதை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டுச் சிற்பியான Frédéric Auguste Bartholdi என்பவர் ஆவார்.
ரஷ்யா உக்ரைன் நிலைப்பாடு தொடர்பில் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள் மற்ற நாடுகளைக் கொந்தளிக்கச் செய்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதியுமான ரஃபேல், அமெரிக்கா அடக்குமுறை ராஜ்யங்கள் பக்கம் சாய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அறிவியல் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களை பணிநீக்கம் செய்வது முதலான ட்ரம்பின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ரஃபேல், ஆகவே சுதந்திர தேவி சிலையை அமெரிக்கா பிரான்சுக்கே திருப்பிக் கொடுக்கவேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.
அமெரிக்கா பதிலடி
🚨Politicians in France are asking for the Statue of Liberty BACK.
— Benny Johnson (@bennyjohnson) March 17, 2025
Karoline Leavitt chose VIOLENCE:
"I would like to remind France that it's only because of the USA that the French are not speaking German right now. So they should be very grateful to our great country”
WOW. pic.twitter.com/PuG864VYj1
ரஃபேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செயலரான கரோலின் லீவிட் (Karoline Leavitt), பிரான்சுக்கு கொஞ்சமாவது நன்றி வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்தக் கீழ்த்தரமான பிரெஞ்சு அரசியல்வாதிக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் பிரான்சுக்கு உதவவில்லையென்றால், இப்போது பிரான்ஸ் மக்கள் ஜேர்மன் மொழிதான் பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என சுடச்சுட பதிலளித்துள்ளார் கரோலின்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |