புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் பிரித்தானிய பிரதமரின் திட்டத்துக்கு மீண்டும் பின்னடைவு
புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் பிரித்தானிய பிரதமரின் திட்டத்துக்கு பிரான்ஸ் தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால், மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் பிரதமரின் திட்டம்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பிரித்தானியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

அவ்வகையில், பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும் திட்டம் ஒன்றை முன்வைத்திருந்தனர்.
அதாவது, புலம்பெயர்வோர் பயணிக்கும் சிறுபடகுகள் கடலுக்குள் இறங்கியதுமே, அவற்றை பிரான்ஸ் பொலிசார் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதுதான் திட்டம்.
அத்திட்டம் விரைவில் அமுலுக்கு வரும் என பிரித்தானியா எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், பிரான்ஸ் பொலிஸ் யூனியன்கள் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளன.
பிரான்ஸ் பொலிஸ் யூனியன்களில் பெரிய யூனியனான Alliance என்னும் அமைப்பு, அப்படி புலம்பெயர்ந்தோர் படகுகளை கடலில் தடுத்து நிறுத்துவது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும் படகிலிருக்கும் நிலையில், அந்த படகுகளை தடுத்து நிறுத்துவதோ, கட்டாயப்படுத்தி மீண்டும் கரைக்குக் கொண்டுவருவதோ ஆபத்தான விடயமாகிவிடும் என Alliance எச்சரித்துள்ளது.

பிரான்சுக்கு பிரித்தானியா பெரும் தொகை கொடுத்தும், ஒப்பந்தங்கள் செய்தும், பிரான்ஸ் தரப்பு முழுமையாக ஒத்துழைக்காததால் பிரித்தானியாவின் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், பிரான்ஸ் பொலிஸ் யூனியன்கள், புலம்பெயர்ந்தோர் படகுகளை கடலில் தடுத்து நிறுத்த இயலாது என கூறிவிட்டதால் பிரதமர் ஸ்டார்மரின் திட்டத்துக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |