பிரித்தானிய படகை சிறைபிடித்த பிரான்ஸ்! இரு நாடுகளுக்கிடையே தீவிரமடையும் பிரச்சினை
இரு நாடுகளுக்கு இடையிலான பிரெக்சிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் பிரச்சினை தீவிரமடைந்ததையடுத்து, பிரித்தானியா படகை பிரான்ஸ் சிறைபிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் கடல்சார் அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டதாவது, புதன்கிழமை Le Havre-யில் நடந்த சோதனையின் போது இரண்டு பிரிட்டிஷ் படகுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முதல் படகு தொடர்ந்து வாய்மொழி உத்தரவுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்பட்டது.
இரண்டாவது படகிடம் எங்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க உரிமம் இல்லை. அது கடற்கரைக்கு திருப்பிவிடப்பட்டு நீதித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது என பிரான்ஸ் கடல்சார் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீன்பிடி பிரச்சனையை தீர்க்கப்படவில்லை என்றால், நவம்பர் 2 ஆம் திகதி முதல் பிரித்தானியாவுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை பாரிஸ் முன்னெடுக்க தொடங்கும் என்று பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் கிளெமென்ட் பியூன் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.