பிரான்ஸ் தேர்தல்: தங்கள் பணத்தை பாதுகாக்க சுவிஸ் வங்கிகளிடம் உதவிகோரும் பிரான்ஸ் பணக்காரர்கள்
பிரான்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விடயம், சுவிஸ் வங்கிகளை பரபரப்பாக வேலை செய்யவைத்துள்ளதாக துறை சார்ந்தோர் தெரிவித்துள்ளார்கள்.
ஓயாமல் ஒலிக்கும் தொலைபேசிகள்
பிரான்ஸ் நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
இந்த விடயம் பணக்காரர்களை சற்றே பயமடையச் செய்துள்ளதாக தோன்றுகிறது. ஆம், சுவிஸ் வங்கி ஊழியர்கள், தங்களை பிரான்ஸ் நாட்டவர்கள் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, பிரான்சில் வலது சாரியினர் ஆட்சிக்குவந்தால், தங்கள் சேமிப்புக்கு பாதிப்பு வரும் என அந்நாட்டு மக்கள் அஞ்சுவதாகத் தெரிகிறது.
முன்னர் பிரான்ஸ் நாட்டவர்கள் மட்டுமல்ல, பல நாட்டு பணக்காரர்களும் தங்கள் பணத்தை சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக சேமித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது அப்படிச் செய்யமுடியாது. ஆனாலும், தங்கள் பணத்தைக் காப்பாற்ற ஏதாவது செய்யமுடியுமா என பிரான்ஸ் நாட்டவர்கள் சுவிஸ் வங்கி ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்களாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |