43 வயதில் 3-வது தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி! டுவிட்டரில் வெளியிட்ட பதிவு
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மூன்றாவது தடுப்பூசி போட்டுக் கொண்டதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா வைரஸ், பல்வேறு விதங்களில் உருமாறி ஒரு சில நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்கரான் வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
இதற்கிடையில் பிரான்ஸ் அரசு தன் நாட்டு மக்களை மூன்றாவது தடுப்பூடு போட்டுக் கொள்ளும் படி தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 3-வது தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
Rappel vaccinal ✅
— Emmanuel Macron (@EmmanuelMacron) November 29, 2021
Vaccin contre la grippe ✅
இந்நிலையில், கடந்த வாரத்தின் இறுதியில் தான் மூன்றாவது தடுப்பூசிப் போட்டுக் கொண்டதாக, ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான்(43) தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தன்னுடைய 2-வது தடுப்பூசியை, கடந்த மே மாதம் 31-ஆம் திகதி போட்டிருந்தார். தற்போது குறித்த தடுப்பூசி போட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில், தற்போது மூன்றாவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
பலருக்கும் மூன்றாவது தடுப்பூசி குறித்த பல சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், நாட்டின் ஜனாதிபதியே மூன்றாவது தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பிரான்சில் மக்கள் 3-வது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.