பிரான்சில் நடந்த மன்னிக்க முடியாத சம்பவம்! கடும் கண்டனம் தெரிவித்த மேக்ரான்
பிரான்சில் கல்லறை மீது சுகாதார அனுமதி அட்டைக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததற்கு ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல், தற்போது பிரான்சில் 5-ஆம் நிலை உச்சத்தில் உள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு பரவி வருவதால், இங்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது.
குறிப்பாக மக்கள் கூடும் பெரும்பாலான இடங்கலில் சுகாதார அனுமதி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் போராட்டக்காரர்கள், விடுதலை வீரர் Mont Valérien புதைக்கப்பட்ட Hubert Germain கல்லறையில், சுகாதார அனுமதி அட்டை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
இவர் நாட்டின் இறுதி விடுதலை போராட்ட வீரர் என்று அழைக்கப்படுவதால், இந்த செயலில் ஈடுபட்டதற்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த இடத்தை அசுத்தப்படுத்துவது ஏற்படுதையல்ல, எந்த ஒரு காரணமும் அதை நியாயப்படுத்தாது. இது நம் நாட்டின் ஹீரோவை அவமதிக்கும் செயலாகும்.
இது மிகவும் முட்டாள் தனமானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொலிசார் இந்த செயலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இது ஒரு மன்னிக்க முடியாத குற்றம் என்று தெரிவித்துள்ளனர்.