மகளிர் உலகக்கோப்பையில் பிரான்ஸ் மிரட்டல் வெற்றி..இரண்டு கோல்கள் அடித்த வீராங்கனை
2023 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
பிரான்ஸ் அதிரடி ஆட்டம்
Hindmarsh மைதானத்தில் நடந்த போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸை, முதல் முறையாக ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய மொராக்கோ அணி எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மொராக்கோ தடுமாறியது.
FRANCK FIFE
15வது நிமிடத்தில் பிரான்ஸின் டையானி ஒரு கோலும், கேன்ச டாலி 20வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
இதனைத் தொடர்ந்து 23வது நிமிடத்தில் ஐகேனியே அபாரமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 3-0 என முன்னிலை வகித்தது.
மொராக்கோ வெளியேற்றம்
மொராக்கோ அணி இரண்டாம் பாதியில் பிரான்ஸின் கோல் மழைக்கு முட்டுக்கட்டை போட்டாலும், அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
Getty Images
ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் ஐகேனியே தனது இரண்டாவது கோலை அடித்தார். இறுதியில் பிரான்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
12ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் பிரான்ஸ் அணி காலிறுதியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |