நாடொன்றில் இருந்து தனது குடிமக்களை அவசரமாக வெளியேற்றும் பிரான்ஸ்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருந்து தனது குடிமக்களை அவசரமாக வெளியேற்ற பிரான்ஸ் தயாராகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்ப்பு உணர்வு பரவலாக
கடந்த வார ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து பிரெஞ்சு எதிர்ப்பு உணர்வு பரவலாக காணப்படுவதே காரணம் எனவும் கூறப்படுகிறது. பிரான்ஸ் மக்கள் மட்டுமின்றி, மற்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களையும் வெளியேற்ற உதவ முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@AFP
ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து பிரெஞ்சு தூதரகம் தாக்குதலுக்கு இலக்கானது. மேலும், புர்கினா பாசோ மற்றும் மாலியில் உள்ள இராணுவ ஆட்சிக்குழுக்கள் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரும் எந்தவொரு பலவந்தமான முயற்சியும் போர்ப் பிரகடனமாக பார்க்கப்படும் என்று எச்சரித்தனர்.
இரு நாடுகளும் முன்னாள் பிரெஞ்சு காலனிகள் என்ற நிலையில், தற்போது பிரான்ஸ் ஆதரவில் இருந்து விலகி, ரஷ்யா பக்கம் சென்றுள்ளனர். இந்த இரு நாடுகளின் இராணுவ ஆட்சிக்குழுக்கள் விடுத்த எச்சரிக்கையானது இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மக்களை வெளியேற்றும் பணி
மேற்கத்திய நாடுகளுடன் அழுத்தமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ள நைஜர் நாடு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது. மேலும், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் அங்கு ராணுவ தளங்களைக் கொண்டுள்ளன.
@AFP
2021ல் மாலியின் ராணுவத் தலைவர்கள் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையுடன் ஒப்பந்தம் முன்னெடுக்க, நைஜரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் முன்னெடுத்தது.
ஞாயிறன்று நடந்த போராட்டத்தில், ரஷ்யாவுக்கு ஆதரவாக முழக்கமிடப்பட்டதுடன், பிரான்ஸ் வெளியேற வேண்டும் எனவும் கோரப்பட்டது. இந்த நிலையில், மக்களை வெளியேற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நைஜர் வான்வெளியும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியேற முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |