வன்முறை வெடித்துள்ள நைஜர் நாட்டில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள்: இந்தியாவுக்கு பிரான்ஸ் செய்துள்ள உதவி
நைஜர் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில், அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் பலரை வெளியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.
பிரான்ஸ் செய்துள்ள உதவி
சில நாடுகள் தங்கள் நாட்டுக் குடிமக்களை வெளியேற்றிய நிலையில், பிரான்ஸ், தனது மக்களை மட்டுமின்றி வேறு சில நாடுகளின் குடிமக்களையும் நைஜர் நாட்டிலிருந்து வெளியேற்ற உதவியுள்ளது.
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் உரசல்கள் இருந்த நிலையிலும், பிரித்தானியக் குடிமக்கள் சிலரையும் தனது விமானத்தில் ஏற்றிவந்துள்ளது பிரான்ஸ்.
AFP
இந்தியாவுக்கும் உதவி
இந்நிலையில், இந்தியக் குடிமக்களையும் நைஜர் நாட்டிலிருந்து வெளியேற்ற பிரான்ஸ் உதவியது தெரியவந்துள்ளது.
இதுவரை, நான்கு விமானங்கள் பிரான்ஸ் மற்றும் பிற நாட்டு குடிமக்களை நைஜர் நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளன. 992 பேர் பிரான்ஸ் உதவியுடன் நைஜர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
அதுபோக, ஐந்தாவது ஒரு விமானமும் மக்களுடன் புறப்பட இருப்பதாக ஐரோப்பா மற்றும் வெளிவிவகாரங்களுக்கான பிரான்ஸ் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |