குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் அழுகையை நிறுத்த பெண் செய்த மோசமான விடயம்
பிரான்சில், குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலை செய்துவந்த பெண்ணொருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
11 மாதக் குழந்தையை...
பிரான்சிலுள்ள பகல் நேர குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்துவந்த அந்தப் பெண் மீது, ஒரு 11 மாதக் குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பயங்கரம் என்னவென்றால், அந்தக் குழந்தையின் வாயில் ஹார்ப்பிக் போன்றதொரு டாய்லெட் சுத்தம் செய்யும் திரவத்தை ஊற்றியுள்ளார் அந்தப் பெண்.

எக்கச்சக்கமாக அந்தக் குழந்தையின் வாயில் அந்த திரவத்தை ஊற்றியதால் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது.
அமிலத்தன்மை கொண்ட அந்த திரவத்தை உட்கொண்டதால் பிள்ளை பல மணி நேரம் துடிதுடித்து இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
எதற்காக அப்படிச் செய்தாய் என்று கேட்டால், குழந்தை விடாமல் அழுதுகொண்டே இருந்தது, அழுகையை நிறுத்தத்தான் அப்படி செய்தேன் என்று கூறியுள்ளார் அந்த 29 வயது பெண்.
முதலில் அந்தப் பெண்ணுக்கு 25ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, தற்போது அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு அந்தப் பெண்ணால் ஜாமீனிலும் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |