பிரான்சின் அடுத்த ஜனாதிபதி என எதிர்பார்க்கப்படும் பெண்: உருவாகியுள்ள சிக்கல்
2027ஆம் ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியின் தலைவரான பெண்ணொருவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
அடுத்த ஜனாதிபதி என எதிர்பார்க்கப்படும் பெண்
National Rally என்னும் அக்கட்சியின் தலைவரான மரீன் லெ பென் (Marine Le Pen)தான் பிரான்சின் அடுத்த ஜனாதிபதியாவார் என்றே கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

உருவாகியுள்ள சிக்கல்
ஆனால், 3 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற நிதியை மோசடி செய்த விடயத்தில் மரீனுக்கு பங்கு இருப்பதாகக் கூறப்படும் விடயத்தில், பாரீஸ் நீதிமன்றம் ஒன்று மரீன் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
அந்த தீர்ப்பை எதிர்த்து மரீன் மேல்முறையீடு செய்துள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்றமும் மரீன் குற்றவாளி என தீர்ப்பளிக்கும் பட்சத்தில், ஒன்றில் தேர்தலில் போட்டியிட அவருக்கு தடை விதிக்கப்படலாம். அல்லது, அவர் காலில் மின்னணுப்பட்டை அணிய நேரிடலாம். அல்லது, இரண்டுமே நிகழலாம்!
அப்படி தான் காலில் மின்னணுப்பட்டை அணியும் நிலை உருவானால், தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மரீன் தற்போது கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |