ரஷ்யப் பெண்ணை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ள பிரான்ஸ்: யார் அந்தப் பெண்?
பிரான்ஸ் ஊடகங்களில் ரஷ்ய பிரச்சாரங்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷ்ய நாட்டவரான பெண்ணொருவரை நாட்டை விட்டு வெளியேற பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது.
யார் அந்தப் பெண்?
அவரது பெயர் செனியா ஃபெடரோவா (Xenia Fedorova). பிரான்சில், ரஷ்யா டுடே என்னும் ஊடகத்தின் தலைவராக இருந்தவர் அவர்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு பிரான்ஸ் அந்த ஊடகத்தை தடை செய்துவிட்டது.
அதன்பின், பிரான்ஸ் நாட்டு கோடீஸ்வரரான வின்சென்ட் போலோர் என்பவருக்கு சொந்தமான ஊடகங்களில் விமர்சகராக பணியாற்றிவந்தார் செனியா.
செனியா, பல்வேறு தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் அடிக்கடி தோன்றும் நிலையில், அவர் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் குறித்த ரஷ்யாவின் கருத்துக்களை ஊடகம் வாயிலாக பரப்பிவருவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, செனியா நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து செனியா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |