அடுத்த 3 வாரங்களுக்கு இது தொடரும்! பிரான்ஸ் முக்கிய அறிவிப்பு
பிரான்சில் இரவு விடுதி மூடல் மேலும் நீட்டிக்கப்படும் என நாட்டின் சுற்றுலா துறை அமைச்சர் Jean-Baptiste Lemoyne அறிவித்துள்ளார்.
பிரான்சில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,79,807 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. பிரான்சில் பதிவான தினசரி பாதிப்பில் இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாட்டில் இரவு விடுதி மூடல் அடுத்த 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் Jean-Baptiste Lemoyne அறிவித்துள்ளார்.
ஒமிக்ரான் மாறுபாடு பரவலை தடுக்க இந்த வாரம் அரசாங்கம் அறிவித்த பல புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கட்டாய இரவு விடுதிகள் மூடல் நீட்டிக்கப்படுவதாக Jean-Baptiste Lemoyne கூறினார்.
கடந்த டிசம்பவர் 6ம் திகதி நாட்டில் உள்ள சுமார் 1600 இரவு விடுதிகளை நான்கு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.
ஒமிக்ரான் பரவி வந்த நிலையில் பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்கள் பயணம் மூலம் தொற்று பரவல் அதிகரிப்பதை தவிர்க்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.